Categories
அரசியல் மாநில செய்திகள்

டப்பிங் ஆர்டிஸ்ட் அண்ணாமலை…! கடிதம் எழுதிய ஸ்டாலின்…. வரவேற்ற சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதல்வர் கடிதத்தை நான் வரவேற்கிறேன், அதற்கு முன்பு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம்  நான் கேட்பது என்னவென்றால்,  ஆந்திர முதல்வர் ஜகன்மோகன்ரெட்டி அவர்கள்.. கொசுத்தலை. கொற்றலை ஆற்றில் இரண்டு அணை கட்டுவது , நீங்கள் அதை கட்டக்கூடாது என்று சொல்வது சரி.

ஆனால் நீங்க நம்ம ஊரில் தலைநகரில் ஓடுகின்ற கொற்றளையாற்றில் உயர் மின் கோபுரத்தை கட்டுகிறேன் என்று ஆற்றையே குறுக்க மறித்து  கட்டி வைத்துள்ளீர்கள் அதை ஆய்வு செய்தீர்களா? அந்த ஆறு கழிமுகத்தின் வழியே போய் கடலில் கடக்கும் போது, அந்த இடத்தில் காட்டுபள்ளியில் அதானி  துறைமுகம் கட்டுகிறேன் என்று,  பெரிய மதில் சுவரை கட்டி ஆற்றை  குறுக்கே தடுத்து தண்ணியை உள்ளே போகாமல் நிறுத்தி வைத்துள்ளார்.

அதை நீங்கள் ஆய்வு செய்தீர்களா? முதலில் இதைப் பார்த்து தகர்த்து எடுத்து விட்டு அவருக்கு கடிதம் எழுதுவதில் நியாயம் இருக்கிறது. இதை செய்யாமல் அவருக்கு கடிதம் எழுது என்ன பயன் வரப்போகிறது ?  அதான் நாம் கேட்கின்ற கேள்வி….

கட்ச தீவை மீட்போம் என்று நான் தான் குரல் கொடுக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை மீட்க வேண்டும். அவர் முழு அதிகாரத்தில் இருந்து கொண்டு, எங்களோடு சேர்ந்து குரல் கொடுப்பேன் என்று சொல்வதற்கு அண்ணாமலை டப்பிங் ஆர்டிஸ்டா குரல் கொடுப்பதற்கு..   குரல் பதிவு கலைஞரா அவரு. அது சும்மா வேடிக்கை என தெரிவித்தார்.

Categories

Tech |