Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்… நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை!

கொரோனா எதிரொலி காரணமாக நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மேலும் அத்தியாவசிய தேவையான மளிகை, பால், இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காமல் வழக்கத்தை விட இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து நின்று இறைச்சி வாங்கிச் செல்கின்றனர்.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் இன்று (4 ஆம் தேதி) மற்றும் நாளை (5 ஆம் தேதி ) ஆகிய இரு நாள்களுக்கு கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் முட்டை விற்பனை வழக்கம் போல் நடைபெறும், முட்டை கடைகளுக்கு தடை கிடையாது என்றும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறைச்சி வாங்குவதற்கு ஓரிடத்தில் குவிந்ததின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |