கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் பேனல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் டி.வியின் விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பேனல்களின் (panel) விலை மிகவும் குறைவு என்பதால் அதிகளவில் இந்தியாவின் டி.வி. தயாரிப்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்து வந்தன. மேலும் பிற நாடுகளும் அங்கிருந்து வாங்குகின்றன. ஆனால் தற்போது சீனா மட்டுமின்றி உலகையே கொரோனா வைரஸ் மிரட்டி வருகின்றது. இதனால் சீனாவில் இயல்புநிலை முற்றிலும் முடங்கியுள்ளது. அதன் காரணமாக அங்கு உற்பத்தி குறைந்து பேனல் விநியோகம் தடைபட்டு தட்டுப்பாடு நிலவியுள்ளது.
ஆகவே சீனாவில் பேனல்களின் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, அதனால் ஏற்படும் இழப்பினை சரிசெய்வதற்கு தொலைக்காட்சி பெட்டிகளின் விலையை உயர்த்த டி.வி. தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனால் அடுத்த மாதம் இந்தியாவில் டி.வியின் விலை முதல் 10 % வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்களுக்கான கம்ப்ரசர்களின் விநியோகமும் தடைபட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயரலாம் என்று கருதப்படுகிறது.