Categories
தேசிய செய்திகள்

“இறுதிச்சடங்கு செய்ய வராத உறவினர்கள்”… ஒருநாள் கணவரின் சடலத்துடன் தங்கியிருந்த மனைவி..!!

கொரோனா அச்சம் காரணமாக உறவினர்கள் யாரும் இறுதிச்சடங்கு செய்ய முன்வராததால், இறந்த கணவரின் உடலுடன் மனைவி காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறது.. ஆனாலும் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் சற்று அதிகமாகத்தான் காணப்படுகிறது. இதனால் பிற நோய்களால் இறக்கும் உறவினர்களின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இதன்காரணமாக சில இடங்களில் தன்னார்வலர்களே இறுதிச்சடங்கை முன்னின்று  நடத்திவிடுகின்றனர்.

அந்த வகையில் கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ராங்கோலி ஹல்லாவைச் சேர்ந்தவர் அன்னப்பா.. சிறிய அளவிலான வீட்டில் குறைந்த வருவாயோடு வாழ்ந்து வந்த அன்னப்பா கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிப்புடன் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அன்று அவர் இறந்துள்ளார்.. இதுகுறித்து அன்னப்பாவின் மனைவி பர்வதம்மா உறவினர்களுக்குத் தகவல் சொல்லி வருமாறு கூறியுள்ளார். ஆனால், கொரோனா அச்சத்தின் காரணமாக அன்னப்பாவிற்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் யாருமே முன்வரவில்லை.

ஏழ்மையின் பிடியில் சிக்கித்தவிக்கும் அன்னப்பாவின் மனைவி பர்வதம்மா, தனியாளாக தனது கணவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவித்துள்ளார். இதனால் தன்னுடைய கணவரின் சடலத்துடன் சுமார் 24 மணி நேரம் இருந்துள்ளார். இதனிடையே, கிக்கேரி என்ற கிராமத்திலிருந்து இவர்களது உறவினர்களில் ஒருவர் மட்டும் வந்து அன்னப்பாவைப் பார்த்துவிட்டுச் சென்றுள்ளார்.

நேரம் ஆக ஆக அன்னப்பாவின் உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கி விட்டது.. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அன்னப்பாவின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு அடக்கம் செய்யப்படாமல் கிடந்த அவருடைய உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்து சுகாதாரத் துறைக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலுவலர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்று அன்னப்பாவின் உடலை அடக்கம் செய்தனர்.

Categories

Tech |