இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறி காட்சியளிப்பதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது
இந்தோனேசியாவின் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்ட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கு பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகள் அனைத்தும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மீட்புப்படையினர் பொதுமக்களை பத்திரமாக ரப்பர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.
மேலும் வெளுத்து வாங்கும் வெள்ளத்தால் ஜாவா, பாலி, நுசா தெங்கரா உள்ளிட்ட தீவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடலில் உருவாகியிருக்கும் புயல்கள் காரணமாக ஜாவாவின் தெற்கு கடற்கரையோரம் கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.