பெண் ஒருவர் தகாத உறவு காரணமாக குழந்தைகளை தவிக்க விட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் வேல்முருகன் – தனலச்சுமி. வேல்முருகன் அருகில் உள்ள கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந் நிலையில் கம்பெனிக்கு சென்று விட்டு வேல்முருகன் இரவில் நீண்ட நேரம் கழித்துதான் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதையடுத்து தனலட்சுமிக்கு அந்த பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தனலட்சுமி படுக்கையறை வரை கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்ற வேல்முருகன் வீட்டிற்கு தாமதமாக வந்து கதவைத்தட்டியுள்ளார்.
நீண்ட நேரம் கழித்து தன லட்சுமி கதவை திறந்துள்ளார். இதையடுத்து உறங்குவதற்காக வேல்முருகன் படுக்கை அறைக்கு சென்று கீழே குனிந்து பேண்டை கலட்டிய போது கட்டிலுக்கு அடியில் ரமேஷ் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மனைவியின் தகாத உறவை அறிந்து கோபமடைந்த வேல்முருகன் மனைவி மற்றும் ரமேஷை தாக்கியுள்ளார். இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் தன்னுடைய மனைவியின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனலட்சுமியின் பெற்றோர் வேல்முருகன் வீட்டுக்கு வந்து தனது மகளை கண்டித்துள்ளனர். அப்போது வீட்டிற்கு சென்று தனலட்சுமி கதவை பூட்டிக்கொண்டு மின் விசிறியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தகாத உறவு காரணமாக குழந்தைகளை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.