Categories
கிரிக்கெட் விளையாட்டு

“காயம் காரணமாக விலகும் ஷிகர் தவான்” ரிஷப் பண்டுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

ஷிகர் தவான் காயம் காரணமாக விலகுவதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது  

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இங்கிலாந்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் கடந்த 09-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில்  ஷிகர் தவான் பேட்டிங்கின் போது  இடது கை பெரு விரலில் பந்து பட்டதால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இப்போட்டியில் தவான் சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். காயம் குணமடைய  3 வாரங்கள் ஆகும் என்பதால் அவர் 3 வாரம்  விளையாடமாட்டார் என இந்திய அணியின்  மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் காயம் குணமடைய மேலும் ஜூலை மாதம் இறுதிவரை ஆகும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் உலகக்கோப்பையில் இருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவதாக  பிசிசிஐ தெரிவித்துள்ளது

Categories

Tech |