Categories
தேனி மாவட்ட செய்திகள்

தென்மேற்கு பருவ மழையால்… குளம்போல் காட்சியளித்த சாலை… வாகனங்கள் செல்ல முடியாததால் பொதுமக்கள் அவதி…!!

தேனி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் தேனி முக்கிய பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

இதனை தொடர்ந்து என்.ஆர்.டி.நகர், காந்திஜி நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். மேலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சேமிக்க முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |