வரனே அவஸ்யமுண்ட் என்ற திரைப்படத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக தமிழக மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
துல்கர் சல்மான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடித்து வெளியான வரனே அவஸ்யமுண்ட் என்ற திரைப்படத்தின் தலைப்பு கேப்டன் பிரபாகரனை இழிவுபடுத்துவது போல் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. துல்கர் சல்மானுக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்து வந்தன.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் திட்டமிட்டு தலைப்பை வைக்கவில்லை.தவறாக இருந்தால் தமிழ் மக்கள் என்னை மன்னித்துவிடுங்கள். மீறியும் கோபம் இருக்கும் பட்சத்தில் என்னை மட்டும் திட்டுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தமிழக மக்களை மனம் உருக வைத்துள்ளது.