மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மற்றும் அறக்கட்டளையான வேபாரார் பிலிம்ஸ் மூலம் ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் துல்கர் கைட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தோடு சேர்ந்து தற்போது மருத்துவ உதவி தேவைப்படும் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளார். இந்த திட்டத்திற்கு Wayfarer’s tree of life என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் லோகோவை துல்கர் நேற்று அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின்படி சிறுநீரகம், குடல் மற்றும் இருதய நோய் உள்ள 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஏற்கனவே ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வியை வழங்கி வரும் துல்கர் தற்போது 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்ய முன் வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.