Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலியானது விற்பனையா….? வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

போலியான மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊராளி பட்டியில் போலியான மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முத்துவீரன் என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது போலியான மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலியான மதுபாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக முத்து வீரனை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 47 போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |