காசோலையில் போலி கையெழுத்திட்டு ரூ4,00,000 நகராட்சி பணத்தை மோசடி செய்த கணக்காளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் ஊழியர் ஒருவரிடம் இரண்டரை லட்சம் நிரப்பப்பட்ட நகராட்சிக்கான காசோலையை கொடுத்து வங்கியில் மாற்றி வர அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் காசோலையில் போடப்பட்டிருந்த கையெழுத்தின் மீது சந்தேகம் வர நகராட்சி தலைமை ஆணையர் திருமலை என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் சரஸ்வதி தான் போலி கையெழுத்திட்டு அனுப்பியது தெரியவந்தது.. இதனடிப்படையில் சரஸ்வதியிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில்,
கடந்த ஆண்டு இதே போல் போலி கையெழுத்திட்டு ரூபாய் 4 லட்சம் அளவில் மோசடி செய்தது தெரியவந்தது.. இதையடுத்து நகராட்சி மண்டல தலைமை இயக்குநர் உமா மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட. சரஸ்வதி மீது துறை ரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இதில் அதிகாரிகள் யாருக்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.