Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது என்ன வித்தியாசமா இருக்கு… சிக்கிய 5௦௦ மற்றும் 1௦௦ ரூபாய் கள்ள நோட்டுகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கள்ள நோட்டு தயாரித்த கும்பலை கைது செய்த போலீசார், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துவிட்டனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக இரவில் ஒரு வாலிபர் வந்துள்ளார். இவர் மதுபாட்டில்களை வாங்கி விட்டு 500 ரூபாயை விற்பனையாளரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டை பார்த்தவுடன் விற்பனையாளருக்கு சந்தேகம் வந்ததால் உடனடியாக சாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபர் கொடுத்த 500 ரூபாய் நோட்டை சோதித்துப் பார்த்தபோது, அது கள்ளநோட்டு என போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சத்திரப்பட்டியில் வசித்து வரும் கார் டிரைவரான சந்தோஷ்குமார் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்த போது, அங்கு ரூபாய் 1 1/2 லட்சம் மதிப்புள்ள 100 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் அந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்ததோடு, அங்கிருந்த கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட எந்திரமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. மேலும் போலீசார் சந்தோஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டி பகுதியில் வசித்து வரும் பெருமாள் சாமி மற்றும் மைதீன் ஆகிய இருவர் கள்ளநோட்டு தயாரிக்க இவருக்கு உதவியாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் கள்ளநோட்டை எங்கெல்லாம் மாற்றினார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |