Categories
அரசியல்

பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா?… அமைச்சருக்கு துரைமுருகன் கேள்வி..!

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா? என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள் என்பது மலிவான அரசியல் அல்ல; ஜனநாயக உரிமை என அவர் கூறியுள்ளார்.

ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை கருவிகளை தமிழக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அரசின் ஐசிஎம்ஆர் அனுமதி அளித்த அதே விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.

ரேபிட் கிட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர் மட்டுமே இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், தமிழக அரசு பெற்றுள்ள 24,000 கிட்கள் திரும்ப அனுப்பப்படுகின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி அரசியல் லாபம் அடையும் முயற்சியை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய கருத்திற்கு திமுக-வின் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள் என்பது மலிவான அரசியல் அல்ல; ஜனநாயக உரிமை என கூறியுள்ளார்.

Categories

Tech |