தர்பார் ட்ரைலர் யூடூப்பில் லைக்கா புரோடக்ஷன் வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் தர்பார் இசை வெளியீட்டு விழா விழாவில் அனைத்து பாடல்களும் வெளியான நிலையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. அதிலும் சும்மா கிளி பாடல் வேற லெவல் ஹிட் என்றே கூறலாம். இதனை தொடர்ந்து தர்பார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வந்தது. எப்போது படத்தின் ட்ரைலர் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது விருந்தாக இன்றைக்கு லைகா புரோடக்சன் டிரெய்லரை வெளியிட்டு உள்ளது.
வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்து வரும் தர்பார் ஒரு CLASSIC AND MASS ட்ரைலர் ஆக ரஜினிகாந்துக்கு அமைந்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் தர்பார். ஆகையால் அவரது நடிப்பை காண ரசிகபெருமக்கள் ஆரவாரத்துடன் காத்திருந்த நிலையில் ட்ரைலர் அவர்களின் ஆரவாரத்தை பூர்த்தி செய்தது என்றே கூறலாம் ட்ரைலரை காண வேண்டுமெனில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்