பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிற படத்தை வேறு யாரும் பார்க்க விடாமல் எல்லா தியேட்டர்களிலும் உதயநிதி படத்தை போட்டு, அந்த படத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி மக்கள் பிரதிநிதி மேயர் எல்லாம் ஓடுறாங்க. எங்கம்மா… ஓடுகிறீர்கள் என்றால் ? முதல் நாள் ஷோ பார்க்க போகிறேன் என்கிறார்கள்.
திமுகவினுடைய மக்கள் பிரதிநிதிகள் முதல் நாள் இந்த படத்தை போய், எந்த தியேட்டரில் பார்க்கலாம் என்று நீங்கள் காட்டுகின்ற ஆர்வத்தை ஒரு நாள் மக்களுக்கு காண்பித்தீர்கள் என்றால், எவ்வளவு பிரச்சனைகள் இந்த சமுதாயத்தில் குறையும். கழகத் தலைவனுக்கு முன்னாள் முதலமைச்சர் பார்த்த இன்னொரு படம் இருக்கிறது.
அந்த படத்தினுடைய பெயர் லவ் டுடே. அந்த லவ் டுடே படம் பார்த்தீர்கள் என்றால், இதெல்லாம் முதலமைச்சர் பார்க்கிறார். அது ஏதோ இரண்டு பேர் காதலிக்கிறார்கள். காதலித்தவர்கள் செல்போனை ஒரு நாள் மாற்றிக் கொள்ள வேண்டுமாம், அதுதான் கதை. இப்படியெல்லாம் கதையை யோசித்து எடுக்கிறார்கள் பாருங்கள். அந்த பையனுடைய செல்போன் பொண்ணுக்கும், பொண்ணுடைய செல்போன் பையனும் வாங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார், எங்கள் அப்பா, எங்கள் அம்மா, நான் மூன்று பேரும் படம் பார்த்தோம். எங்க அப்பா சொன்னார் என்ன அற்புதமான படம் என்று…. கலைஞருடைய பையன், பாருங்கள். என்ன அற்புதமா இந்த படம் இருக்கிறது என்று சொன்னார். படம் எல்லாம் பார்த்து முடித்துவிட்டு எங்கள் அம்மா கேட்டார்கள்….
அந்த படத்தில் வருகிறது போல் நாமளும் செல்போனை மாற்றிக் கொள்ளலாமா என்று, விட்டால் போதும் என்று நானும், எங்க அப்பாவும் ஓடினோம் பாருங்க… அந்த ஏரியாவில் இல்லை. ஒரு செல்போனை நம்பி முதலமைச்சர் கொடுக்கவில்லை. ஆனால் முதலமைச்சரை நம்பி எட்டரை கோடி பேர் இருக்கிறோம். என்ன நடக்குமா? காலங்காத்தால… இவர் என்ன பேசுவாரோ? என்று ஒன்றுமே புரியவில்லை என விமர்சனம் செய்தார்.