தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் பகுதியை சேர்ந்த ராமநாதன் முத்துலட்சுமி தம்பதிகளுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ராமநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். முத்துலட்சுமியின் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் இவர் மிகவும் அமைதியான பெண் என்றும், வேளையில் திறமைசாலி எனவும் கூறப்படுகிறது. முத்துலட்சுமி இரண்டாவது முறை கர்ப்பமானார்.
இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இயற்கையாக குழந்தை பிறக்க முடியாத காரணத்தினால், மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினார். அறுவை சிகிச்சை செய்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை சிறிது நேரத்தில் முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்பு விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.