செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய அளவிலான புரிதலில் இருந்து சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ் எப்படி ஒவ்வொரு அரசு துறையிலும் ஊடுருவுகிறது. எல்லா துறைகளிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 24 மணி நேரமும் முழு நேர பணியை துவங்குகிறார்கள். அதிகாரிகளை கவர்ந்து கையகப்படுத்துகிறார்கள்.
அது தமிழ்நாட்டிலும் நடக்கிறது என்று நான் முன்னெச்சரிக்கையாக சுட்டி காட்டுகிறேன் அவ்வளவுதான். முதல்வர் அவர்களுக்கு ஏற்கனவே அது பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கும். இதை பற்றிய புரிதல் அவருக்கு இருக்கும். இருந்தாலும் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம், அவ்வளவுதான். ஜெயலலிதா, கருணாநிதி காலத்தோடு இதை பொருந்தக் கூடாது. அப்போ ஆர்.எஸ்.எஸ் வாலாட்ட வில்லை. இப்போ அவுங்களுக்கு வால் முளைச்சி இருக்கு.
தமிழ்நாட்டுல வால் நீண்டு இருக்கு, அவ்வளவுதான். அப்போ அவங்களோட வால் குட்டையா இருந்தது கர்நாடகாவோட சுருட்டி கிட்டாங்க. இப்போ நீண்டிருக்கு, இங்கே பலவீனமான தலைமை உள்ளது என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றார்கள், இது தவறு. கலைஞர், ஜெயலலிதா இல்லாத நிலையிலும் கூட எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து வலுவான ஒரு கூட்டணி அமைத்து, அதிமுக பாஜக சதியை முறியடித்து, அவர்களின் கூட்டுச் சதியை, சூழ்ச்சியை சூதினை முறியடித்து, ஆட்சியை கைப்பற்றிய தலைமை தான் ”திமுக தலைமை”. எனவே திமுக தலைமையை குறைத்து மதிப்பிடுகின்ற முயற்சி, அந்த முயற்சி. அதுவும் இங்கே எடுபடாது என தெரிவித்தார்.