3 வது டெஸ்ட் போட்டியின் போது அஸ்வின் விஹாரியுடன் தமிழில் பேசிய காணொளியானது தமிழக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஹனுமா விஹாரி இரண்டு பேரும் ஜோடி சேர்ந்து பேட்டிங் செய்துள்ளனர். அப்போது விஹாரியோடு அஸ்வின் தமிழில் பேசி இருக்கிறார். அதாவது “கவலைப்படாத பால் நேரா தான் வரும். பத்து பத்து பாலா நம்ம பார்த்துக்கலாம்” என்று அஸ்வின் தமிழில் பேசிய அந்த காணொளி தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் அந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
— Niruban Chakkaravarthi M (@Niruban_be) January 11, 2021