இங்கிலாந்தில் ஒரு பூங்காவில் பட்ட பகலில் ஒரு காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் கோர தாக்குதலால் இங்கிலாந்து நாடே உருக்குலைந்து போயுள்ளது. அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பிடியில் சிக்கி இறந்துவிட்டனர். அதேபோல் தலைநகர் லண்டனும் ஏராளமானோரை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருக்கிறது.
கொரோனா இங்கிலாந்தை பிடித்து வைத்து மிரட்டி கொண்டிருக்க, இன்னொரு புறம், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவம் ஒன்று லண்டன் நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறி இருக்கிறது.. தற்போது அந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
அப்படி என்னதான் நடந்தது என்றால்.. கொரோனா வேகமாக தாக்குதல் ஏற்படுத்தியதன் காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. எனினும் மக்கள் அவசரத் தேவைக்காக வீட்டை விட்டு வெளியே சென்று வரலாம். அதேபோல உடற்பயிற்சி செய்வதற்காக பூங்காக்களுக்கு செல்வதற்கும் குறிப்பிட்ட நேரம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஊரடங்கின்போது உடற்பயிற்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை, ஒரு ஜோடி ஜாலியாக உல்லாசம் அனுபவிக்க பயன்படுத்திக்கொண்டது தான் அதிர்ச்சி.. அதாவது, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ‘செயின்ட் ஜேம்ஸ்’ (St James’s Park,) என்ற பெயரில் ஒரு பூங்கா இருக்கிறது.. இந்த பூங்காவிற்கு ஒரு ஜோடி கடந்த சனிக்கிழமை பிற்பகலில் வந்துள்ளது.. பின்னர் அங்குள்ள நடைபாதையில் படுத்து கிடந்து ஜாலியாக உல்லாசம் அனுபவித்துள்ளது.
அத்தனைக்கும் அந்த ஜோடி உல்லாசம் அனுபவிக்கும் போது அந்த வழியே பலறும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மேலும் பலர் சைக்கிளிலும் வலம் வந்துள்ளனர். அவர்கள் யாரும் இதை பார்த்து விட்டு கண்டும் காணாதது போல் சென்று விட்டனர்.. அதேபோல உல்லாசத்தில் மூழ்கி கிடந்த ஜோடியும் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. யார் பார்த்தால் என்ன பார்க்காமல் போனால் என்ன என்று சுமார் 15 நிமிடம் வரை ஜாலியாக இருந்துள்ளனர்.
அப்போது, அந்த வழியாக குதிரைகளில் ரோந்து சுற்றி வந்த பாதுகாவலர்கள் இருவர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து உல்லாசத்தில் ஈடுபட்டிருந்த ஜோடியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளனர்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஜோடி, பாதுகாவலர்களிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளது..
ஆனால், பதிலுக்கு பதில் பேசிய பாதுகாவலர்களோ அந்த உல்லாச ஜோடியை கடுமையாக எச்சரித்து அனுப்பாமல் சற்றுத்தூரமாக நின்று கொண்டு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ‘சமூக இடைவெளி மிக அவசியம் ’ என விளக்கிக் கூறியதுதான், இதன் உச்சம்.
அதேநேரம் இந்த காட்சிகளையெல்லாம் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டார்.. அதைப்பார்த்து பலரும் ‘விவஸ்தை கெட்டவர்கள்’ என அந்த ஜோடியை இங்கிலாந்து நாட்டினர் மட்டுமில்லாமல் பலரும் இப்போது கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டு வருகின்றனர்…