ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அந்தியூர் கிராமத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அந்த கிராமத்தில் வயல் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் கடம்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மற்றும் அந்தியூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களிடமிருந்த 720 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.