Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘டிவில்லியர்ஸ் ஃபார்மில இருக்கும்போது’…! அவரை கட்டுப்படுத்துவது கஷ்டம் … விராட் கோலி பேச்சு …!!!

நேற்று நடந்தத ஐபிஎல் போட்டியின்  10வது லீக் ஆட்டத்தில் , கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.

நேற்று நடந்தத 10 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதை பற்றி கேப்டன் கோலி கூறும்போது, நடந்த போட்டியில் மேக்ஸ்வெல் டிவில்லியர்ஸ் இருவரின் அதிரடி ஆட்டமே வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதோடு டிவில்லியர்ஸ் ஃபார்மில் இருக்கும்போது அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

வேகம் குறைவாக காணப்படும் இந்த ஆடுகளத்தில் ,நாங்கள் 40 ரன்களை  கூடுதலாக எடுத்துள்ளோம் என்று நினைக்கிறேன் இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கொல்கத்தா அணி தோல்வி அடைந்ததை பற்றி கேப்டன் மோர்கன் கூறும்போது, நாங்கள் நினைத்ததை விட மைதானம் நன்றாகவே இருந்தது. ஆனால் ஆர்சிபி அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் ,நாங்கள் தோல்வியை சந்தித்தோம். சென்னை ஆடுகளம் கடினமாக இருப்பதாகவும், அடுத்து நடக்க உள்ள போட்டி வேறு இடத்தில் நடைபெறுவதால் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Categories

Tech |