Categories
தேசிய செய்திகள்

“7 பேரின் உடலில்”… இறந்தும் உயிர் வாழும் 17 வயது சிறுமி… நெகிழ வைக்கும் சம்பவம்..!!

17 வயது சிறுமி உயிரிழந்ததால் அவரது பெற்றோரின் விருப்பத்துடன் சிறுமியின் உடல் உறுப்பு தானம் வழங்கப்பட்ட நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹலோவைச் சேர்ந்த 17 வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மூளை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோர் விருப்பத்துடன் ஏழு உறுப்புகள் வெவ்வேறு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப் பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது நந்தினி ஆபத்தான நிலையில் வதோதராவில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

மூளையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை காப்பாற்ற முடிந்தவரை மருத்துவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் புதன்கிழமை மாலை 5 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவரின் பெற்றோர் விருப்பத்துடன் அவரின் இதயம், நுரையீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை தானமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதயம் மற்றும் நுரையீரல் மும்பைக்கு கொண்டு செல்ல 8 நிமிடங்களில் மருத்துவமனையிலிருந்து ஹரிணி விமான நிலையத்திற்கு 6.8 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ஒரு பச்சை நடைபாதையை நகர போக்குவரத்து போலீஸார் உருவாக்கினர். சிறுநீரகங்கள் கண்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை அகமதாபாத் அருகே ஐ.கே.டி மருத்துவமனையில் சரியான நேரத்தில் இணைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 7 உறுப்புகளை தானம் செய்வது வதோதராவில் இதுதான் முதல்முறை.

மருத்துவமனையின் நிர்வாக துறையின் டாக்டர் தரங் சர்மா கூறியதாவது: ” இறந்த மாணவியின் பெற்றோர் அவரின் உறுப்புகளை தானம் செய்ய தயாராக இருந்ததால், அவரின் உறுப்புகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டு, சரியான நேரத்தில் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு வதோரா நகர போக்குவரத்து போலீசார் முக்கிய பங்காற்றியுள்ளனர். அனைத்து உறுப்புகளும் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு பொருத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் ஏ.எஸ்.ஐ.ரமேஷ்பாய், ஏ.எஸ்.ஐ விஜய்பாய், தலைமை கான்ஸ்டபிள் பிரகாஷ்பாய், டிரைவர் ரபிக்பாய் மற்றும் பிரக்னேஷ்பாய் ஆகியோர் இணைந்து, சரியான நேரத்தில் வழங்கப்பட்ட உறுப்புகளை சரியாக கொண்டு சேர்த்தனர்.

Categories

Tech |