Categories
மாநில செய்திகள்

“அமோக வரவேற்பு” சென்னை மக்களுக்கு இ-பைக்…. இனி ஜாலியோ ஜாலி தான்…!!

சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பைக் சேவைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்த இ-பைக்கின் வாடகை முதல் 10 நிமிடங்களுக்கு 10 ரூபாயும், அதன் பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றது.

சைக்கிளின் வாடகை முதல் ஒரு மணி நேரத்திற்கு 5.50, அடுத்த அரை மணி நேரத்துக்கு ரூபாய் 9.90 ஆகும். இதற்கு ஜிஎஸ்டி வரியும் உண்டு. மேலும் இந்த சேவைக்கு 3 மாத பயண அட்டை, ஒரு நாள் பயண அட்டை, ஒரு மாத பயண அட்டைகளும் வழங்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |