Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை அறிய… இதை யூஸ் பண்ணுங்க…!!

மின் கட்டணம் எவ்வளவு, எத்தனை யூனிட் மற்றும் பிற விவரங்களை அறிய விரும்புபவர்களுக்கு மின்சார துறை சார்பில் இணையதளம் ஒன்று தரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே செய்து வருகின்றனர்.

அதன்படி மின் கட்டணமும் ஆன்லைனிலேயே செலுத்துவதற்கான வழிமுறைகள் முன்பிருந்தே உள்ளது. தற்போது மின்சார துறை சார்பில் ஒரு இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மின் கட்டணம் எவ்வளவு, எத்தனை யூனிட் மற்றும் பிற விவரங்களை அறிய விரும்புபவர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் சென்று , pay online with registration என்ற இணைப்பு இருக்கும். அதனை கிளிக் செய்தால் திறக்கப்படும் இணையப்பக்கத்தில் New user – Register Here என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும். பிறகு அதில் கட்டணத்தை செலுத்தலாம். மேலும், கூகுள் பே போன்பே ஆப் வெளியிலும் மின் கட்டணத்தை செலுத்தலாம்.

Categories

Tech |