இ-பாஸ் விதிமுறைகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது சில மாவட்டங்களை ஒன்றிணைத்து மண்டலமாக பிரித்து அதற்குள் பயணம் செய்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அரசு தற்காலிகமாக அதனை ரத்து செய்து புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இ-பாஸ் மேல் இக்கும் புதிய விதிகளின்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் அவசியம். மாவட்டத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என தெரிவித்துள்ளது. இன்றிலிருந்து 30ஆம் தேதி வரை இந்தப் புதிய உத்தரவு அமலில் இருக்கும். பொதுப் போக்குவரத்து மாவட்டங்களுக்கு மட்டும் செயல்படும்.
தனிநபர் வாகனத்தில் செல்லும்போதும் மாவட்டத்தை விட்டு அடுத்த மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் அதைப் போன்று மற்றொரு மாவட்டத்திற்குள் செல்ல அவசியம் தமிழகம் முழுவதிலும் முழு ஊரடங்குக்காண எந்த அறிவிப்பும் முதலமைச்சரிடம் இருந்தோ தமிழக அரசிடம் இருந்தோ அறிவிக்கப்படவில்லை