தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டைப் போக்க, மின் கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சென்னைவாசிகள் மட்டுமல்லாமல், கிராம மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே மாலை முதலே மின்வெட்டு ஏற்படுகின்றது.
அதேபோல் கிராமங்களிலும், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி மின்சாரத்தில் மின்மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். ஊரடங்கு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில் மின் கட்டணத்தை செலுத்த அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.