21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏடிஎம் மையம் ஒன்றில் கழுகு இருந்தது மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
நாடு முழுவதும் ஏடிஎம் மையங்களில் பாதுகாப்புக்காக காவலாளிகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் காவலாளிகள் இல்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஏடிஎம் மையம் கழுகு தங்கும் இடமாக மாறிவிட்டது. இதனால் அந்த ஏடிஎம் சென்று பணம் எடுக்க பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் துப்புரவு பணி மேற்கொண்ட பணியாளர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து அந்தக் கழுகை எடுத்து மரத்தில் விட்டுள்ளனர்.