ஏழ்மையால் வாடிய ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர் ஒருவருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் நடிகர் கதிருக்கு தந்தையாக தங்கராசு என்ற நாடக கலைஞர் நடித்திருந்தார் . சமீபத்தில் தங்கராசு ஏழ்மையால் வாடுவது குறித்த தகவல் வெளியானது .
இந்நிலையில் இந்த செய்தியை அறிந்த நெல்லை கலெக்டர் அவருக்கு குடிசைமாற்று தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார் . மேலும் அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிகப் பணி ஒன்றை வழங்கியுள்ளார் . இதுகுறித்த பணி ஆணையை அவர் கொடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.