பாகிஸ்தான் நாட்டில் முன்னதாகவே பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கிறது என்று ராணுவ மந்திரி மறைமுகமாக கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனையடுத்து முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரீப்பை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்ததாவது, புதிதாக இராணுவ தளபதி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே பொதுத் தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது.
நவம்பர் மாதத்திற்கு முன் காபந்து அரசாங்கத்திற்கு பதில், புதிய ஆட்சி அமைக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் பிரதமர், ஷபாஸ் ஷெரீப், கட்சித் தலைமை குறித்து பல முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள தன் சகோதரனான நவாஸ் ஷெரிப்பை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற லண்டன் சென்றிருக்கிறார்.