தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க வியல் மையம் தெரிவித்துள்ளது.
தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் பைசாபாத் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலையில் பொது மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த தகவலை தேசிய நிலநடுக்க வியல் மையம் வெளியிட்டுள்ளது.