Categories
உலக செய்திகள்

WARNING: 1 இல்ல 2 இல்ல 20 வினாடிகள்…. பீதியடைந்த பொதுமக்கள்…. பிரபல நாட்டில் நடந்த திடீர் சம்பவம்

அமெரிக்காவில் ஏற்பட்ட ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தால் 75 கோடியே 54 லட்சம் வரையில் பொருளாதார இழப்பீடுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் சான்பிரான்சிஸ்கோ என்னும் நகரம் உள்ளது. இந்த நகரிலிருந்து 375 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்ட ரிக்டரில் 6.2 ஆக பதிவாகிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவில் நேற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் நீடித்ததால் கலிபோர்னியாவிலுள்ள வீடுகளும், கட்டிடங்களும் அதி பயங்கரமாக குலுங்கியுள்ளது. மேலும் இந்த அதி பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 75 கோடியே 54 லட்சம் வரையில் பொருளாதார ரீதியான இழப்பீடுகள் ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்க நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |