Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மேலும் அதிர்ச்சி.. அதிகாலையில் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் திடீரென்று பெரிய நிலநடுக்கம் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நில அதிர்வுக்கான தேசிய மையம் நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் உட்பட முழு நாட்டையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே பொதுமக்களிடையே கடும் பதற்றம் நிலவுகிறது. இதில் முக்கியமாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மக்கள் நாட்டைவிட்டு தப்பித்து வருகிறார்கள். விமான நிலையத்தில் மக்கள் குவிந்து காணப்படுகிறார்கள். இந்நிலையில் பதற்றத்தில் இருக்கும் மக்களை மேலும் அதிர வைக்கும்  விதமாக இன்று அதிகாலையில் ஃபேசாபாத்திலிருந்து தென்கிழக்கு 83 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருவானது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.5 என்று பதிவானது. இதனால் மக்கள் பதற்றம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |