Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம்… 4,9-ஆக ரிக்டரில் பதிவு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நள்ளிரவு நேரத்தில் நிலடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் என்னும் நகரத்தில் இரவு 12:38 மணிக்கு லேசாக நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், சுமார் 93 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த, இந்த நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஜூன் மாதத்திலும் அந்நாட்டில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |