சீன நாட்டில் இன்று மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் குயிங்காய் என்னும் மாகாணத்தில் இருக்கும் டெலிங்கா நகரத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக அந்நாட்டின் நிலநடுக்க நெட்வொர்க் மையம் கூறியிருக்கின்றது.
8 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 12ஆம் தேதி அன்றும் இம்மாகாணத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.