இன்று இந்தோனேஷியாவின் தெற்கே சுமத்ராவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இன்று இந்தோனேஷியாவின் தெற்கே சுமத்ராவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய பெருங்கடலில் உள்ள சுங்கா பெனு நகரின் தென்மேற்கே சுமார் 196 கிலோ மீட்டர் தொலைவில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.