ஜப்பானில் இன்று அதிகாலை நேரத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் இருக்கும் புகுஷிமா என்னும் மாகாணத்தில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ளது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
மேலும், சில இடங்களில் 20 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதே பகுதியில் சுமார் 10 வருடங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.