தைவானில் 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தைவான் நாட்டின் கடற்கரை பகுதிக்கு அருகில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்நிலநடுக்கமானது, ஹெங்சுன் என்ற நகரத்திற்கு தென்கிழக்கு பகுதியில் 44 கிலோ மீட்டர் தூரத்தில் உருவானது.
10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. தைவான் நாடு மிகப்பெரிய நிலநடுக்கங்களால் தொடர்ந்து பாதிப்படையும் நெருப்பு வளையம் என்ற நில அதிர்வு செயலில் இருக்கும் மண்டலத்தில் உள்ளது.