தைவானை பயங்கர நிலடுக்கம் தாக்கியதில் மக்கள் கடும் பீதியடைந்து, தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தைவான் தீவானது, புவிதட்டுகள் அவ்வப்போது நகரும் இடத்தில் அமைந்திருக்கிறது. இதனால் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும். அந்த வகையில், கிழக்கு கடலோர பகுதியில் நேற்று மிகப்பெரிய நிலநடுக்கம் உண்டானது.
இந்த நிலநடுக்கமானது, 6.2 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் தலைநகரே இந்த பயங்கர நிலநடுக்கத்தில் குலுங்கிப்போனது. இதில் மக்கள் பீதியடைந்து குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களிலிருந்து தப்பி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.