புவியியல் ஆய்வு மையம் தென் பசுபிக் பிராந்திய நாடுகளில் ஒன்றான வனுவாட்டு தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள வனுவாட்டு தீவின் போர்ட் விலா பகுதியில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 22.9 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.