ஜப்பானில் 5.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவான, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஜப்பானில் உள்ள ஹோன்சு என்ற நகரத்தில் கிழக்கு கடலோர பகுதியில், திடீரென்று நேற்று இரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் 5.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருக்கிறது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம், 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்திருக்கிறது.
இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எந்தவித தகவலும் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதுமட்டுமல்லாமல் கடந்த ஞாயிற்று கிழமை அன்றும் தகஹாகி நகரில் 5.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.