ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் இந்துகுஷ் மலைப் பகுதியில் இன்று காலை சுமார் 8:00 மணிக்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது என்று அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
இந்த நிலநடுக்கமானது, நாட்டின் தலைநகரான காபூலில் இருந்து சுமார் 316 கிலோ மீட்டருக்கு தெற்கில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இதனால், வேறு எந்த சேதங்களும் உண்டாகவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.