அருணாச்சல பிரதேச ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இன்று அதிகாலை 4.24 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தல் கட்டிடங்கள் , வீடுகள் ஆதித்ததாக உணரப்படுகின்றது.
மக்கள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த வேளையில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர். இது ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.