சீனாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீன நாட்டில் லூசோ என்ற பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
இதனை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அப்பகுதி மாகாண அரசு லூசோ பகுதியில் நிலநடுக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மீட்புப் பணிகளை தீவிரமாக்கியுள்ளது.