இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 7.6 என்ற அளவில் ரிக்டர் அளவுகோளில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் இன்று காலை நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இது 7.6 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது.
இந்த நிலநடுக்கமானது, நாட்டிலுள்ள மௌமரே நகரிலிருந்து சுமார் 95 கிலோமீட்டருக்கு வடக்கு பகுதியில் உருவானது. நல்லவேளையாக, இதனால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், நில தட்டுகள் அசைவதால் அவ்வப்போது, நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.