ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பானின் நாட்டின் ஹோகைடோ பகுதியில் அந்நாட்டின் நேரத்திற்கு அதிகாலை 5.16 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. எவ்வித சேதாரமும் தெரிவிக்கப்படாத நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது.