மலேசியாவில் பயங்கரமான நிலநடுக்கம் உருவாகி கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மலேசியாவில் இருக்கும் கோலாலம்பூர் நகரில் இருந்து 157 கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கர நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருக்கிறது. இந்த கடும் நிலநடுக்கத்தில் கடைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் பதறிய மக்கள் அலறியடித்துக்கொண்டு குடியிருப்புகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தார்கள். இந்த நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படவில்லை.