அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது.
மெக்சிகோவில் இன்று அதிகாலை சுமார் 2:25 மணிக்கு ஹக்சிட்லா என்ற நகரத்திற்கு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் உருவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.0 என்று பதிவானது. இதனை அமெரிக்க வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட் சேதங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதேபோன்று இரு தினங்களுக்கு முன்பாக ரிசோ டி ஓரோ என்ற நகரத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் பயங்கர நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 என்று பதிவானதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.