பெரு நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5-ஆக பதிவானது.
பெரு என்ற தென் அமெரிக்க நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 என்று பதிவாகியிருக்கிறது.
நாட்டின் புவியியல் ஆய்வு மையமானது, அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்திருக்கிறது. மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானாலும், சுமார் 112 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால், அதிக சேதங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.