Categories
உலக செய்திகள்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பிலிப்பைன்ஸில் ரிக்டர் அளவு 5.5 ஆக பதிவு !!

பிலிப்பைன்ஸின் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு பகுதியில் இன்று காலையில் சுமார் 10 மணிக்கு 5.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கியாம்பா போன்ற பல நகரங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் தற்போது வரை இதனால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இதே போல் பிலிப்பைன்ஸில் கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் ஏழு நபர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

Categories

Tech |